டிடிஎப் வாசன் காதலியா? இளம் மலையாள நடிகை..

Published:

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோ அடுத்த சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. ஐந்தாம் சீசனுக்கான ப்ரோமோ ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில் இன்னும் ஷோ எப்போது தொடங்கும் என்பதை விஜய் டிவி அறிவிக்கவில்லை.

ஏற்கனவே CWC 5 முதல் எபிசோடுக்காண ஷூட்டிங் நடந்து முடிந்துவிட்டது என்றாலும் போட்டியாளர்களாக யாரெல்லாம் வர போகிறார்கள் என்கிற தகவலை விஜய் டிவி ரகசியமாகவே வைத்து இருக்கிறது

இந்த சீசனில் போட்டியாளர்களாக விடிவி கணேஷ், ஸ்ரீகாந்த் தேவா, VJ பிரியங்கா, யூடியூபர் இர்பான் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ள இருப்பதாக முன்பே தகவல் வெளியானது .

இந்நிலையில் இளம் மலையாள நடிகை ஷாலின் ஸோயா CWC 5ல் குக் ஆக வர இருப்பது உறுதியாகி இருக்கிறது. ஷாலின் ஸோயா தமிழில் ராஜா மந்திரி, கண்ணகி ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சர்ச்சை பிரபலம் டிடிஎப் வாசனின் காதலி இவர் என கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

 

https://www.instagram.com/p/C1yUEVXySjF/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

 

 

Related articles

Recent articles

spot_img