சினேகன் – கன்னிகா தொடங்கிய புது பிசினஸ்.

Published:

நடிகை நயன்தாரா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அழகு பொருட்கள் விற்பனை பிசினஸ் தொடங்கிய நிலையில் அதே போல கவிஞர் சினேகன் மற்றும் அவரது மனைவி கன்னிகா ஆகிய இருவரும் சேர்ந்து ஒரு புதிய பிசினஸை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி பாடல் ஆசிரியரான சிநேகன் கடந்த 25 ஆண்டுகளாக ஏராளமான திரைப்பட பாடல்களை எழுதி வருகிறார் என்பதும் அவரது பாடல்கள் பெரும்பாலும் சூப்பர் ஹிட் ஆகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் பாடலாசிரியர் சினேகன், நடிகை கன்னிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அவ்வப்போது தம்பதியாக இருக்கும் புகைப்படங்கள் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்.

மேலும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சினேகன் இருக்கும் நிலையில் இருவரும் சேர்ந்து தேர்தல் பிரச்சாரம் செய்தார்கள் என்பதும் அது குறித்த வீடியோவும் இணையத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது சினேகன் மற்றும் கன்னிகா இணைந்து ஒரு புதிய பிசினஸ் தொடங்கியுள்ளனர். தலைக்கு தேய்க்கும் மூலிகை எண்ணெய் உற்பத்தி செய்வதாக கூறியுள்ள சினேகன் இது குறித்து அவர்கள் தங்கள் சமூக வலைதளங்களில் கூறியிருப்பதாவது

சிநேகம் மூலிகை ஹேர் ஆயில் அறிமுகப்படுத்துகிறோம். இயற்கையான முடி பராமரிப்பு தீர்வுகளுக்கான உங்கள் இலக்கு இதுதான். செயல்திறன் மற்றும் பாதுகாப்பிற்காக மருத்துவரீதியில் பரிசோதிக்கப்பட்ட எங்களின் முதன்மை தயாரிப்பு சினேகம் ஹெர்பல் ஹேர் ஆயில். இதன் மூலம் ஆரோக்கியமான, பளபளப்பான கூந்தல் பெறலாம். உங்கள் முடி பராமரிப்பு வழக்கத்தை மாற்றும் ரகசியம் இதுதான் என பதிவு செய்துள்ளனர்.

https://www.instagram.com/reel/C6acRp_xBrM/?utm_source=ig_web_copy_link 

 

 

Related articles

Recent articles

spot_img