விக்ரம் வேதா ரீமேக்கில் இருந்து ஹிருத்திக் ரோஷனும் விலகல்

0 140

கடந்த 2017 இல் விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் ‘விக்ரம் வேதா’ படம் வெளியானது. புஷ்கர் – காயத்ரி என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்கிய இந்தப்படம் கேங்ஸ்டர் பாணி கதைக்களத்தில் புதுமையாக சொல்லப்பட்டிருந்தது.

இந்தப்படத்தின் கதை ஹிந்திக்கும் செட்டாகும் என்பதால், ஆமீர்கான் மற்றும் சயீப் அலி கான் இருவரையும் இணைத்து ஹிந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

ஆனால் இப்படத்தில் இருந்து ஆமீர்கான் வெளியேறிவிட்டார் என்றும், சீனாவில் வெளியிடும் அளவுக்கு இப்படத்தை பிரமாண்டமாக உருவாக்க ஆமீர்கான் நினைத்து, இந்த கொரோனா சூழலில் அது முடியாமல் போனதால் அவர் வெளியேறியதாக சொல்லப்படுகிறது.

அதையடுத்து ஆமீர்கானுக்கு பதிலாக, அந்த கேரக்டரில், ஹிருத்திக் ரோஷன் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவியது. ஆனால், தற்போது அவரும் இந்தப்படத்தில் இருந்து வெளியேறி விட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது “ தி நைட் மேனேஜர் ” என்கிற வெப் சீரிஸில் நடிக்க திகதிகளை ஒதுக்கி தந்துள்ள ஹிருத்திக் ரோஷன், கொரோனா இரண்டாவது அலை காரணமாக தள்ளித்தள்ளி போகும் விக்ரம் வேதா ரீமேக்கிற்கு தான் கால்ஷீட் தரமுடியாத நிலையில் இருப்பதாக கூறி விலகி விட்டார் என்றும் சொல்லப்படுகிறது.