தயாரிப்பாளர் பூஷண்குமார் மீது பாலியல் துன்புறுத்தல் புகார்

0 93

பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரும் புகழ்பெற்ற டி-சீரிஸ் ஆடியோ நிறுவனத்தின் உரிமையாளருமான பூஷண் குமார் மீது மும்பை டிஎன் நகர் பொலிஸ் நிலையத்தில் பாலியல் துன்புறுத்தல் முறைப்பாடு கொடுக்கப்பட்டு, எப்ஐஆர் போடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரவிக்கின்றன.

குறித்த முறைப்பாடானது, 30 வயதான பெண் ஒருவர் பூஷண்குமார் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றதாக அளித்த முறைப்பாட்டின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டை பூஷண்குமார் தரப்பினரோ மறுத்துள்ளனர். அவர்கள் தரப்பில் இருந்து வெளியிட்டுள்ள செய்தியின்படி, ‛‛குறித்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட பெண், தான் வெப்சீரிஸ் தயாரிக்கப்போவதாக பூஷண்குமாரை அணுகி அதற்கான முதலீட்டு பணம் கேட்டாராம்.

ஆனால் அதற்கு பூஷண்குமார் மறுத்துவிட்டதால், தன்னிடம் தவறாக நடந்ததாக வெளியில் கூறிவிடுவேன் என பணம் கேட்டு மிரட்டியதாகவும், அதற்கு பூஷண்குமார் இணங்காமையினால், அவர்மீது பொய்யான குற்றச்சாட்டை கூறி முறைப்பாடு அளித்துள்ளாராம். இதை சட்ட ரீதியாக சந்திப்போம்” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.