அந்நியன்

0 82

படம் : அந்நியன்
வெளியான ஆண்டு : 2005
நடிகர்கள் : விக்ரம், சதா, விவேக் பிரகாஷ்ராஜ், நாசர்
இயக்கம் : ஷங்கர்
தயாரிப்பு : ஆஸ்கர் வி.ரவிச்சந்திரன்

ஒரு நாட்டில் வாழும் மக்கள் அந்நாட்டின் சட்டத்தை மதிக்கின்றார்களா? என்ற கேள்விக்கு, பதிலாக படத்தின் திரைக்கதையினை அமைத்து இயக்குனர் ஷங்கரினால் உருவாக்கப்பட்ட படம் தான் அந்நியன்.

நாட்டின் சட்டத்தை மீறுவோரை, கருட புராணம் என்ற புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள தண்டனைகளை பயன்படுத்தி விக்ரம் தண்டனை வழங்குவதாக இப்படம் அமைந்திருந்தது.

‘மல்டிபிள் பெர்சனாலிட்டி டிசார்டர்’ பாதிப்புக்கு உள்ளானவராக நடிகர் விக்ரம் தனது நடிப்பால் ரசிகர்களை இப்படத்தில் மிரட்டியிருந்தார்.

அப்பாவி வேடத்தில் அம்பியாகவும், காதல் மன்னனாக ரெமோ மற்றும் கொலைகார அந்நியன் என, மூன்று அவதாரங்களில், தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இதில் பிரகாஷ்ராஜின் நடிப்பும் பாராட்டப்பட்டது.

Related Posts

கஜினி

கதை, திரைக்கதையில் இயக்குனர் ஷங்கருக்கு பக்கபலமாக இருந்த எழுத்தாளர் சுஜாதா, வசனத்தில் ‘ஐந்து பைசா திருடினா தப்பா…’ என்ற வசனம் வெகு பிரபலமடைந்து அவர் சிறந்த எழுத்தாளர் என்ற முத்திரையை அழுத்தமாக பதித்தார்.

அந்நியன் படமானது தெலுங்கு, ஹிந்தி மொழிகளில், ‘டப்பிங்’ செய்யப்பட்டு வெளியானது. அதுமட்டுமின்றி பிரெஞ்சு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, பிரான்சில் திரையிடப்பட்ட முதலாவது இந்திய திரைப்படம் என்ற பெருமையையும், அந்நியன் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பீட்டர் ஹெய்னின் சண்டை காட்சிகள் பார்வையாளரை மெய்சிலிர்க்க வைத்தது. குறிப்பாக, ‘டைம் ப்ரீஸ்’ யுக்தியை பயன்படுத்தி எடுக்கப்பட்ட கராத்தே பள்ளி சண்டைக் காட்சி, தியேட்டரிகளில் பார்வையிட்ட ரசிகர்களை வாய் பிளந்து பார்க்க வைத்தது என்ற சொன்னால் மிகையாகாது.

இயக்குனர் ஷங்கர் என்றாலே பிரமாண்டத்திற்கு பெயர் போன இயக்குனர் அது இப்படத்திற்கான பாடல் காட்சிக்காக, ஊர்களுக்கு வர்ணம் தீட்டியது, பல கிலோமீற்றர், தார் சாலையை பட்டுச்சேலையாக மாற்றியது, மலைகளில் படம் வரைந்தது என, தன் வழக்கமான பிரமாண்டத்தை பாடல்களிலும் காட்டியிருந்தார்.

மேலும் இப்படத்திற்கு இசையமைப்பளாரான ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களும், பின்னணி இசையும் வலுசேர்த்தது.

மனதிற்கு நெருக்கமானான், அந்நியன்!