கஜினி

0 124

படம் : கஜினி
வெளியான ஆண்டு : 2005
நடிகர்கள் : சூர்யா, அசின், நயன்தாரா
இயக்கம் : ஏ.ஆர்.முருகதாஸ்
தயாரிப்பு : சேலம் ஏ.சந்திரசேகர்

தமிழ் சினிமாவில் தீனா, ரமணா என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கஜினி படத்திலும் அதிரடி வெற்றி பெற்றார்.

ஹாலிவுட் படங்களான மெமென்டோவில் இருந்து, ‘மெமரி லாஸ்’ கதையையும்; ஹாப்பி கோ லவ்லி – 1951 படத்தில் இருந்து, காதல் காட்சிகளையும் எடுத்து, கலவை செய்து, கஜினி எனக் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்திருந்தார்.

படத்திர் வில்லனால், காதலியை பறிகொடுத்து, ‘ஷார்ட் டைம் மெமரி லாஸ்’ என்ற நோயால் பாதிப்பிற்கு ஆளாகிறார், சூர்யா. அவருக்கு, நடந்த எந்தவொரு சம்பவமும், அடுத்த, 15 நிமிடங்கள் தான் நினைவில் நிற்கும் நிலையில் அவன், வில்லனை எப்படி வீழ்த்துகிறார் என்பது தான் படத்தின் திரைக்கதை.

Related Posts

மொட்டைத் தலை, முரட்டு வேகம் என மிரட்டினார், சூர்யா. தொழிலதிபர் சஞ்சய் ராமசாமியாக, அவ்வளவு அழகாகவும் இருந்தார். சூர்யா – அசின் காதல் காட்சிகள், பெரும் வரவேற்பை பெற்றன. அசின் பொய் சொல்லும் போது தான், எவ்வளவு அழகு!

நயன்தாரா இப்படத்தில் இருக்கிறார்; அவ்வளவு தான். வில்லன் பிரதாப் சிங், அதகளம் செய்திருந்தார். மேலும், இப்படத்தில் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் இரட்டை வேடத்தில் வந்து பிரமிக்க வைத்தார். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு, மிரட்டியது. ஆக் ஷன் காட்சிகளில், அனல் பறக்கவிட்டது.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில், ‘ஒரு மாலை இளவெயில் நேரம், சுட்டும் விழிச்சுடரே மற்றும் ரங்கோலா கோலா…’ உள்ளிட்ட பாடல்கள் ரசகர்களை பரவசப்படுத்தின.

இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் அதே பெயரில் அமீர் கான் நடிப்பில் 2008 இல் ஹிந்தியில் இயக்கினார். இதற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். பாடல்களும், படமும், ‘சூப்பர் டூப்பர் ஹிட்’ அடித்தமை குறிப்பிடத்தக்கது.

என்னதா தமிழில் கஜனி சூப்பர் ஹிட் அடித்தாலும், கஜினி வெளிநாட்டு சரக்கு தான்!