நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கொரோனா

0 114

தமிழ் திரையுலகில் மறுக்கமுடியாத மூத்த நகைச்சுவை நடிகரான செந்திலுக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழ் திரையுலக சினிமாவில் மறக்க முடியாத நகைச்சுவை கூட்டணியாக வலம் வந்து மக்கள் மனதில் அழியா இடம் பிடித்து திகழ்ந்தவர்கள் என்றால் எல்லோரும் கவுண்டமணி-செந்தில் இணை என்றே தெரிவிப்பது வழக்கம்.

நகைச்சுவை நடிகரான செந்தில் தற்போது இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்துவந்துள்ளார்.

மேலும் அரசியலில் ஈடுப்பட்டிருந்த செந்தில் அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. கட்சிகளில் இருந்த சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்து நிலையில் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான செந்திலும் அவரது மனைவி கலைச்செல்வியும் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 5 நாட்களாக குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் இருவரும் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வருவதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்கள் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டராங்கள் எமக்கு தெரிவித்துள்ளனர்.