விக்ரம் நடித்த அந்நியன் திரைப்படம் ரன்வீர் சிங் நடிப்பில் பாலிவுட்டில்

0 214

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான அந்நியன் திரைப்படம் பாலிவுட்டில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

விக்ரம் மூன்று வேடங்களில் நடித்து அசத்தியிருந்த இப்படத்தில் ஷங்கர் சமூகத்தை பற்றிய பல விஷயங்களையும் அவர் ஸ்டைலில் கூறியிருந்தார், மேலும் இப்படமும் வசூல் ரீதியாக பெரிய வெற்றியடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இதனை வருடங்கள் கழித்து தற்போது அந்நியன் திரைப்படம் பாலிவுட்டில் ரீமேக்காகவுள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் அந்நியன் திரைப்படத்தின் தழுவல் உருவாகவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

மேலும் இது குறித்து இயக்குனர் ஷங்கர் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.