‘நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்’ பாடிய நிவேதா தோமஸ்!

0 150

குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடிக்க ஆரம்பித்த நிவேதா தாமஸ், 2003ம் ஆண்டு உத்தரா என்கிற திரைப்படத்தில் அறிமுகமானார்.

அதன் பிறகு 2008ம் ஆண்டு வெருதே ஒரு பார்யா திரைப்படத்தில் ஜெயராம் மற்றும் கோபிகாவின் மகளாக நடித்தார். அதே ஆண்டில் குருவி என்கிற தமிழ்த் திரைப்படத்தில் விஜய்யின் தங்கையாக அறிமுகமானார்.

2009ம்ஆண்டு சமுத்திரகனி இயக்கத்தில் அரசி என்கிற தொடரில் ராதிகாவின் மகளாக நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ஆனார்.

நடிகை நிவேதா தாமஸ் தனது சமூக வலைத்தள பக்கங்களில் மிகுந்த ஆக்டிவாக இருந்து வருவார்.

தனது இன்ஸ்டெகிராம் பக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகியிருந்து சில்லுனு ஒரு காதல் படத்திலிருந்து ‘நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்’ என்கிற பாடலை கிட்டார் வாசித்துக்கொண்டே பாடியுள்ளார்.

இதை பார்த்த அவரது ரசிகர்கள் ‘வேற லெவல்’ ‘வெறித்தனம்’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.