குக் வித் கோமாளி அஸ்வின் மற்றும் புகழுக்கு அடித்த ஜாக்பாட்!

0 169

குக் வித் கோமாளி இரண்டாவது சீசன் மக்களை கலகலவென சிரிக்க வைத்து விட்டு தற்போது சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் குக் வித் கோமாளி இறுதி போட்டி நிறைவடைந்தது.

நமக்கு கிடைத்த தகவலின் படி இரண்டாவது சீசன் டைட்டில் வின்னராக கனி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மிகவும் சிறப்பாக நடைபெற்ற இரண்டாவது சீசன் போட்டியாளர்கள் அடுத்து என்ன செய்ய போகிறார்கள் என்பது ரசிகர்களின் பிரதான கேள்வியாக உள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் உலக புகழ் அடைந்தவர்கள் புகழ் மற்றும் அஸ்வின்.

தற்போது இவர்கள் இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளனர். இந்த தகவல் தான் தற்போது இணையத்தில் தீயாய் பரவிவருகிறது.

Trident Arts தயாரிக்கும் புதிய படத்தை அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்குகிறார். இந்த படத்தில் தான் புகழ் மற்றும் அஸ்வின் நடிக்கிறார்கள்.

இந்த படம் கண்டிபாக வெற்றியடையும் என இருவரின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.