மாஸான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ; அடுத்த பட தலைப்பை வெளியிட்ட நடிகர் கார்த்தி

0 124

விஷாலின் இரும்புத்திரை, சிவகார்த்திகேயனின் ஹீரோ போன்ற படங்களை இயக்கியவர் பி.எஸ்.மித்ரன்.

இவர் அடுத்ததாக கார்த்தி நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாகவும், இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக கடந்தாண்டே அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் கார்த்தி பிசியானதால், இப்படம் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில், இன்று திடீரென இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை வெளியிட்டு நடிகர் கார்த்தி, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அதன்படி இப்படத்திற்கு ‘சர்தார்’ என பெயரிடப்பட்டுள்ளது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்தில் ராஷி கண்ணா மற்றும் கர்ணன் பட ஹீரோயின் ரஜிஷா விஜயன் ஆகிய இருவரும் நாயகிகளாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

ஜார்ஜ் சி வில்லியம்ஸ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்க உள்ளது.