மாமாவின் பாடலை பாடி மனைவியை இம்பிரஸ் செய்த தனுஷ்! வைரல் வீடியோ இதோ!

0 186

நடிகர் தனுஷ் இரண்டு பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்துவிட்டு தற்போது அமெரிக்காவில் ‘தி கிரே மேன்’ படப்பிடிப்பில் உள்ளார்.

இவரது நடிப்பில் வெளியான ‘அசுரன்’ மற்றும் ‘கர்ணன்’ ஆகிய இரண்டு படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது. மேலும், தனுஷுக்கு ‘நடிப்பு அசுரன்’ என்ற பட்டமும் கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்ற நடிகர் என்று தனுஷை பலர் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் அவர் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தில் இடம்பெற்ற ‘இளமை திரும்புதே’ பாடலை பாடி கொண்டு தனது மனைவி ஐஸ்வர்யாவை நோக்கி செல்லும் வீடியோ வைரலாகியுள்ளது.

தனது மனைவியிடம் தனுஷ், சூப்பர் ஸ்டார் பாடலை பாடி இம்பிரஸ் செய்த வீடியோவை அவரது ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.