நடிகர் நெல்லை சிவா காலமானார்

0 136

தமிழ் சினிமாவில் பல படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தவர் நெல்லை சிவா.

இவர் வடிவேலுடன் இணைந்து பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நெல்லை சிவா மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இவருக்கு வயது 60. இன்று மாலை 6 மணி அளவில் அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் பணகுடியில் மரணமடைந்துள்ளார்.

இவரது மறைவிற்கு பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இவரது இறுதி சடங்கு நாளை நண்பகல் நடக்க இருக்கிறது.