கேப்ரில்லாவை தொடர்ந்து ஆஜித்துக்கும் கொரோனா

0 108

கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டவர் ஆஜித்.

இவர் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் மற்றொரு பிக்பாஸ் போட்டியாளரான கேப்ரில்லாவுடன் சேர்ந்து நடனமாடி வந்தார்.

இந்நிலையில் கேப்ரில்லாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து அவருடன் நடனமாடி வந்த ஆஜித்துக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பதிவிட்டுள்ள ஆஜித், “எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னுடைய உடல்நிலை சீராகவே உள்ளது. உங்களுடைய பிரார்த்தனைக்கு நன்றி.

அனைவரும் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வீட்டை விட்டு வெளியே சென்று வரவும். பாதுகாப்பாக இருங்கள். விரைவில் இயல்புநிலை திரும்பும் என நம்புவோம்” என்று ஆஜித் தெரிவித்துள்ளார்.