விஜயகாந்த் வைத்தியசாலையில் அனுமதி

0 134

தேமுதிக கட்சி தலைவரும் நடிகருமான விஜயகாந்த், உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த், பொது நிகழ்ச்சிகளில் எதிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறார்.

இதை கருத்தில் கொண்டே நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலிலும் விஜயகாந்த் போட்டியிடவில்லை. ஆனாலும், தேர்தல் பிரசாரத்துக்காக சென்ற அவர், எதுவும் பேசாமல் தொண்டர்களிடம் வாக்கு சேகரித்தார்.

மேலும், அண்மையில் விஜயகாந்துக்கும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்துக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பின்னர் குணம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு இன்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், அதிகாலை 3 மணிக்கு சென்னையில் உள்ள மியாட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என தகவல்கள் வெளியாகின.