கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நயன்தாரா – விக்னேஷ் சிவன்

0 96

கொரோனா தீவிரமடைந்து வருகின்ற நிலையில் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில், நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி ஒன்றே கொரோனாவை வெல்லும் என்று கூறப்படும் நிலையில், பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை நயன்தாரா மற்றும் அவரின் காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள புகைப்படத்தினை விக்னேஷ் சிவன் அவரிது இன்ஸ்டெகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில், அவர்கள் தங்களது தடுப்பூசியை போட்டுக் கொண்டனர். அவர்களது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.