கிர்த்தி ஷெட்டி தமிழுக்கு வருகிறாரா ?

0 120

புச்சிபாபு சனா இயக்கத்தில் வெளிவந்த ‘உப்பெனா’ படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகத்தில் புதிய கதாநாயகியாக அறிமுகமான கிரித்தி ஷெட்டி. தன் நடிப்பில் வெளிவந்த முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதைக் கவர்ந்துவிட்டார்.

தமிழ் சினிமாவில் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க உள்ள படத்தில் கிர்த்தி ஷெட்டி அறிமுகமாக உள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், தெலுங்கைத் தவிர வேறு எந்த மொழியிலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகவில்லை.

தற்போதைய படங்கள் குறித்து, அவரின் உத்தியோகப்பூர்வ டுவிட்டரில், “என்னுடைய அடுத்த படங்களைப் பற்றி பலவிதமான வதந்திகளைக் கேட்கிறேன். இதுவரையில் நான் மூன்று படங்களில் மட்டுமே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன்.

நானி காரு, சுதீர் பாபு காரு, ராம் காரு ஆகியோருடன் தலா ஒவ்வொரு படங்களில் நடிக்கிறேன். இப்போது நான் ஒத்துக் கொண்ட படங்களை நடித்து முடிப்பதில் மட்டுமே என்னுடைய முழுக்கவனம் இருக்கிறது.

மேலும் புதிய படங்களில் கையெழுத்திட்டால், நான் நிச்சயமாக டுவிட்டரில் பதிவிடுகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.