குரங்குகளுக்காக தண்ணீர் தொட்டி & உணவுப்பொருட்கள் வழங்கிய தளபதி விஜய் மக்கள் இயக்கம்!

0 122

நடிகர் விஜயின் ரசிகர்கள் சமூக பணியில் அடிக்கடி கலந்துக்கொண்டு சேவையாற்றுவதில் ஈடுப்படுவது வழக்கம், அவ்வகையில் தற்போது குரங்குகளுக்காக தண்ணீர் தொட்டி மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கிய வைத்துள்ளனர்.

விஜய் மக்கள் இயக்கம் புதுக்கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ ஐம்பத்து நான்கு ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு அருகில் வசித்த சுமார் 300க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் குடிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

நாட்டில் நிலவுகின்ற கொரோனா ஊரடங்கு மற்றும் வெயில் காலம் என்பதாலும் அங்கு வசிக்கின்ற குரங்குகளுக்கு குடிப்பதற்கு தண்ணீர் கூட கிடைக்காத சூழ்நிலை இருந்துவந்ததுள்ளது.

அதை நிவர்த்தி செய்யும் விதமாக குரங்குகளுக்கு நிரந்தரமாக தண்ணீர் கிடைத்திடும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தண்ணீர் தொட்டி ஒன்று புதிதாக கட்டப்பட்டு குரங்குகளின் பயன்பாடுக்கு தண்ணீர் நிரப்பி திறக்கப்பட்டும் குரங்குகளுக்கு வாழைப்பழங்கள் வழங்கியும் மேலும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது .

இந்த நிகழ்விற்கு புதுக்கோட்டை மாவட்டத்தின் தலைவர் ஜெ.பர்வேஸ், சிவகங்கை மாவட்டத்தின் பொறுப்பாளர் மற்றும் தளபதி விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகளும் கலந்து கொண்டனமை குறிப்பிடத்தக்கது.

இந்த செயல் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.