முதல் முறையாக மூன்று மொழிகளில் நடிக்கும் தளபதி விஜய்

0 84

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் என்பது யாவரும் அறிந்த உண்மையே. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பையும் பெற்றது.

இதனை தொடர்ந்து திலீப்குமார் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும், தளபதி 65 திரைப்படம் உருவாகி வருகின்றது. இந்நிலையில் தளபதி 67 ஆவது படம் குறித்தான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

தளபதி 67 படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பிலும், இயக்குனர் வம்சி இயக்கத்திலும், இந்தத் திரைப்படம் உருவாகும் என்றும், மேலும் இதில் முதன்முறையாக தமிழ் தெலுங்கு இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.