பிறந்த நாள் முடிந்து வெறும் 2 நாளில் மரணமடைந்த பிரபல இசையமைப்பாளரின் அம்மா.!

0 112

பிரபல இசையமைப்பாளர் D இமான் அவர்களின் தாயார் 13 வருடங்களுக்கு முன்பு மரணமடைந்த விடயம் நாம் அறிந்ததே.

ஆனால் ஒவ்வொரு வருடமும் தனது தாயாரின் இறப்பை நினைவு கூறுவதுடன் ஆன்மா சாந்திக்கும் பிரார்த்திப்பது வழமையாகும்.

2001ம் ஆண்டு இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இமான் தற்போது 100க்கு அதிகமான பாடல்களுக்கு இசை அமைத்து ரசிகர்கள் மத்தியில் நிலையான இடத்தை பிடித்துள்ளார்.

திரைத் துறையில் சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் இமான் மிக குறுகிய காலத்தில் பல பாடகர்களை உருவாக்கியவர். என்ன தான் பலரால் கொண்டாடப் பட்டாலும் இமான் அம்மா பிள்ளையாவார்.

இவரது தாயார் ஏற்கனவே உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் may 23 2008ம் ஆண்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார்.

தாயின் மரணம் பற்றி பதிவொன்றை வெளியிட்ட இமான் என் அனைத்துமாய் இருந்த அம்மா உங்கள் ஆன்மா சாத்தியடையட்டும் என குறிப்பிட்டதுடன் பிறந்த நாள் முடிந்து 2 நாளில் மரணமடைந்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.!