பெயரிலிருந்து ஜாதி அடையாளத்தை நீக்கிய நடிகை ஜனனி – குவியும் பாராட்டுகள்

0 130

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி வரை சென்றார். அந்நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். தற்போது படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

அவன் இவன் படத்தில் இயக்குனர் பாலாவின் மூலம் அறிமுகமான ஜனனி ஐயர் அதன்பிறகு பாகன், தெகிடி, அதே கண்கள், பலூன், விதி மதி உல்டா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இவர் நடிக்க வந்த புதிதிலிருந்தே, தனது பெயரை ஜனனி ஐயர் என்று தான் குறிப்பிட்டு வந்தார். சமூக வலைதளங்களிலும் குறித்த பெயரையே பயன்படுத்தி வந்தார்.

இந்நிலையில் தீடீரென, ‘மாற்றம் ஒன்றே மாறாதது, என்றும் ஒற்றுமையுடன்’ என குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் தனது பெயரிலிருந்த ஜாதி அடையாளத்தை நீக்கியுள்ளார்.

அவரின் குறித்த மாற்றத்துக்கு ரசிகர்களின் பாராட்டுகள் குவிந்து வருகிறது. மேலும் நடிகை ஜனனியின் இந்த திடீர் ஜாதி துறப்பிற்கான காரணத்தை அவர் விளக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.