மகன் பிறந்தநாளை கொண்டாடிய விஜய்

0 135

தல அஜித் நடித்த ’கிரீடம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் விஜய்.

 

அதன்பின்னர் ’மதராசப்பட்டினம்’ ’தெய்வத்திருமகள்’ ’தலைவா’ ’சைவம்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியமை குறிப்பிடத்தக்கது. நடிகை அமலாபாலை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார்.

 

அதன்பின் 2019 ஆம் ஆண்டு வைத்தியர் ஐஸ்வர்யா என்பவரை இயக்குனர் விஜய் திருமணம் செய்து கொண்டார். விஜய்-ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு 2020 ஆம் ஆண்டு மே 30 ஆம் திகதி ஆண் குழந்தை  பிறந்தது.

 

இந்த குழந்தைக்கு ’துருவா’ என்று பெயர் வைத்தனர். இந்நிலையில் நேற்று விஜய்-ஐஸ்வர்யா தம்பதியினர் தங்களது குழந்தையின் முதல் பிறந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடியுள்ளனர்.

 

இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.