வலிமை படத்தில் அஜித் நடித்துள்ள கதாபாத்திரம் என்ன தெரியுமா – அட, இது வேற லெவல்

0 128

தல ரசிகர்கள் அனைவருமே எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தின் புதிய அப்டேட்காக தான் ஆவலாய் உள்ளனர்.

குறித்த இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து ஹுமா குரேஷி மற்றும் கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வலிமை படமானது போனி கபூர் தயாரிப்பில் 95% சதவீதம் முடிந்துள்ள நிலையில், சில சிறு சிறு காட்சிகள் மட்டும் மீதம் எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.

வலிமை படத்தில் தல அஜித் பொலிஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது.

இந்நிலையில் வலிமை படத்தில் தல அஜித், ஈஸ்வர மூர்த்தி என்ற பெயரில் சிபிசிஐடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். இந்த தகவல் தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.