இயக்குனர் ஷங்கர் மகள் திருமணம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து

0 136

பிரபல இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் இன்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

இளம் கிரிக்கெட் வீரரும், டி.என்.பி.எல்-லில் விளையாடும் மதுரை பாந்தர்ஸ் அணி உரிமையாளரின் மகனுமான ரோகித்தை, மற்றும் இயக்குனர் ஷங்கரின் மகளான ஐஸ்வர்யாவும் திருமணம் செய்து கொண்டார்.

கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக மணமகள் மற்றும் மணமகனின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஒரு சில முக்கிய பிரபலங்கள் மட்டுமே இந்த திருமண நிகழ்வில் கலந்துகொண்டனர்.

குறித்த திருமணத்திற்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வருகை தந்து மணமக்களை வாழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சுகாதாரத்துறை அமைச்சரான மா.சுப்பிரமணியம் மற்றும் நடிகரும், திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா பரவல் குறைந்த பின்னர் வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்த இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.