இம்மாத நடுப்பகுதியில் வெளிவரவுள்ள வலிமை அப்டேட்

0 140

தல அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் எதிர்பார்த்து வந்த வலிமை படத்தின் முதல்பார்வை (பர்ஸ்ட்லுக்) போஸ்டர் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேர் கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு அஜித் மற்றும் இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை ஆகும். போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜா இசையமைந்துள்ளார்.

இந்நிலையில் படம் குறித்த எந்தவித தகவல்களும் வெளியாகாத நிலையில் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு இணையத்தில் அடிக்கடி கேட்டு வந்தனர்.

குறித்த வலிமை படத்தின் முதல் பார்வை மற்றும் படத்தின் விளம்பரப் பணிகள் அஜித்தின் 50 ஆவது பிறந்த நாளையொட்டி மே 1 முதல் தொடங்கும் என்றும் போனி கபூர் கடந்த மார்ச் மாத இறுதியில் அறிவித்திருந்தார்.

எனினும் மே 1 ஆம் திகதி வலிமை அப்டேட் வெளிவராது என அறிவித்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். கடந்த வருடமும் இதே காரணத்துக்காக வலிமை படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக கடந்த இரண்டு வருடங்களாக கொரோன பரவல் அச்சுறுத்தல் காரணமாக வலிமை படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வலிமை திரைப்படத்தின் முதல்பார்வை தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித்தின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

குறித்த வெளியிடானது இம்மாத நடுப்பகுதியில் எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.