குஷ்புவின் டுவிட்டர் பக்கம் மீட்பு

0 70

தமிழ்த் திரையுலகின் முன்னனி கதாநாயகியும், பாஜகவின் முக்கிய உறுப்பினராகவும் உள்ள குஷ்புவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது தான் இன்றைய சமூக வலைத்தள வட்டாரங்களில் முக்கிய பரபரப்பாகவுள்ளது.

அதன்பின் குஷ்பு தரப்பிலிருந்து இந்த ‘ஹேக்’ குறித்து டுவிட்டர் தரப்பிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டது. தற்போது குஷ்புவின் கணக்கு மீட்கப்பட்டுள்ளதாகவும் ஹேக் செய்யப்பட்ட போது அழிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட பழைய டுவிட்டர் பதிவுகளும் தற்போது குறித்த கணக்கில் காணப்படுகிறதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஷ்புவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும். அவரது கணக்கு முதல் முறையாக கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் ஹேக் செய்யப்பட்டது. அப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. கொரானோ முதல் அலை வந்த போது அவர் பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சித்து டுவிட்டரில் பல பதிவுகளை பதிவிட்டு வந்தார். அந்நிலையில் அவரது கணக்கை யாரோ ஹேக் செய்தார்கள். அதன்பின் அவரது கணக்கு மீட்டெடுத்தார்.

தற்போது பாஜகவில் இருக்கும் போதும் நடிகை குஷ்புவின் கணக்கை யாரோ ஹேக் செய்துள்ளார்கள். இது அரசியல் மற்றும் சினிமா பிரபலமான குஷ்புவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளமையினால் சமூக வலைத்தளங்களில் உள்ள பாதுகாப்பாற்ற தன்மையை வெளிப்படுத்துவதாக வல்லுனர்கள் சொல்கிறார்கள். இதற்கு சம்பந்தப்பட்ட டுவிட்டர் நிறுவனங்கள் சரியான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.