ஆண்ட்ரியா படத்தில் இணைந்த மேலும் ஒரு நடிகை

0 89

‘யுத்தம் செய்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’,‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘பிசாசு’, ‘துப்பறிவாளன்’, ‘சைக்கோ’ என தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் மிஷ்கின்.

இவர் அடுத்ததாக பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகின்ற நிலையில், இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கடந்த வருடம் டிசம்பரில் பிசாசு 2 படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் கொரோனா மற்றும் ஊரடங்கால் படப்பிடிப்பு தடைபட்டது.

தற்போது மீண்டும் குறித்த படப்பிடிப்பை தொடங்கியுள்ள இயக்குனர் மிஷ்கின். இதில் புதிதாக இளம் நடிகை நமிதா கிருஷ்ணமூர்த்தி இணைந்திருப்பதாக தகவல் நமக்கு கிடைத்துள்ளது.

சமீபத்தில் வெளிவந்த தமன்னாவின் நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸில் நமிதா கிருஷ்ணமூர்த்தி நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.