முல்லைத்தீவின் காதல் – உமாகரன் இராசையாவின் “ஒப்பரேசன் வன்னி”

0 131

வெற்றி விநாயகன் வெளியீடாக நடனசிகாமணி ரூபன் (ஜேர்மனி) தயாரிப்பில் அண்மையில் வெளிவந்த பாடல் “ஒப்பரேசன் வன்னி” மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகின்றது.

குறித்த குழுவினால் வெளியிட்டப்பட்ட புட்டுப்பாட்டு உலகமெங்கும் வசிக்கும் இலங்கை தமிழர்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறியமையாமல் இந்தப் பாடல் வெளிவரமுன்னே பலத்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்தது.

இந்த பாடலுக்கான வரியினை உமாகரன் இராசையா எழுதியுள்ளார்.

மேலும் பாடலுக்கான இசையை இசையமைப்பாளர் திஷோன் விஜயமோகன் அமைத்திருந்தார். ரமணன் பாடியிருந்தார். பாடலை அழகாக இயக்கியிருந்தார் வாகீஸ்பரன் இராசையா.

ஏ.எஸ்.ராஜ் ஸ்ரூடியோ சார்பில் ஜீவராஜ் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை செய்துள்ளனர். நடன இயக்கம் ஊரெழு பகி.

பாடலில் ஊரெழு பகியுடன், ஆத்விக் உதயகுமார், ருத்விகா உதயகுமார், மிருஷா ராஜ்குமார், திருமலை பிரணவன் ஆகியோர் பாடலில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

”புட்டு அவிக்க தெரிஞ்சா போதும் சீதனமே வேண்டாம்” என்று புட்டுப்பாட்டில் குறிப்பிட்டதை போல, “கட்டினால் முல்லைத்தீவு பெட்டையத் தான் கட்டுவன்” என்று இந்தப் பாடலிலும் ஒரு (Signature) குறிப்பிடத்தக்க வசனத்தை சேர்த்திருக்கிறார்கள்.

அது ட்ரெண்டாகியுள்ளது. வன்னியின் வாழ்வியலோடு, போரின் தாக்கத்தையும் பேசும் இந்த “ஒப்பரேசன் வன்னி” பாராட்டுக்குரியது.

தொடர்ந்தும் மண் வாசத்துடன் பாடல்களைத் தரும் இந்தக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.