சன் டிவியின் புதிய சீரியல்! அட இவங்க நடிக்கிறாங்களா?

0 172

தற்போது திரைப்படங்களை விட சீரியல்கள் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி முடிந்த சீரியல்களில் ஒன்று தான் தெய்வமகள்.

இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் கிருஷ்ணா மற்றும் சன் டிவியிலே ஒளிபரப்பாகி வெற்றியடைந்த மற்றொரு சீரியல் ‘தென்றல்’ சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ருதி.

தற்போது இந்த இருவரின் வெற்றி கூட்டணியில் மற்றொரு புதிய சீரியல் அறிவிப்பு வந்துள்ளது. ‘தாலாட்டு’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய சீரியலின் ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதிய சீரியல்கள் வரவால் ரசிகர்கள்,ரசிகைகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.