BMW கார் வாங்கிய ரம்யா பாண்டியன்!

0 104

ஜோக்கர் மற்றும் ஆண் தேவதை ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ஓரளவு பிரபலமான ரம்யா பாண்டியன், மொட்டை மாடி போட்டோஷூட் மூலம் பலராலும் அறியப்பட்டார்.

அதன்பின்னர் கிடைத்த குக்கு வித் கோமாளி வாய்ப்பை அருமையாக பயன்பத்திக்கொண்டார். இதன் மூலம் மிக பிரபலமானார் ரம்யா பாண்டியன். அதில் கோமாளியாக இருந்த புகழுக்கும் ரம்யாவுக்கு இருந்த லவ் டிரக்குகள் இப்பொழுது வரை பேசும் பொருளாக உள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு பிறகு, அவர் விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இறுதிவரை நின்று மற்ற போட்டியாளர்களுக்கு டப் கொடுத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கான ரசிகர் பட்டாளம் அதிகரித்தது. மேலும் சில படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில், அவர் தற்பொழுது BMW கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த காருடன் அவர் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ரம்யா.

இதற்கு வாழ்த்துக்களும் லைக்குகளும் குவிந்தாலும் சிலர் பிக் பாஸின் மகிமை என கிசுகிசுக்கவும் செய்கின்றனர்.