குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு சூப்பர் செய்தி – சீசன் 3 அப்டேட்

0 148

உலகமெங்கும் உள்ள ரசிகர்களில் பேராதரவில் விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் ஒளிபரப்பாகி பெற்று வெற்றியடைந்த நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி ஆகும்.

முதல் சீசன் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற குறித்த நிகழ்ச்சியானது இரண்டாவது சீசன் அதைவிட மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது.

குக் வித் கோமாளி இரண்டாவது சீசனின் டைட்டில் வின்னராக இயக்குனர் திருவின் மனைவி கனி தெரிவு செய்யப்பட்டார் .

குக் வித் கோமாளி இரண்டாவது சீசன் முடிந்துள்ள நிலையில் குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது ஆரம்பிக்கும், அதிலும் இதே கோமாளிகள் இருப்பார்களா, என்று ரசிகர்கள் பல கேள்விகள் கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் இருந்த கோமாளிகள் தான் கூடுதலாக முரட்டு சிங்கில் இந்நிகழ்ச்சியில் இருந்து ஒரு கோமாளியும், குரேஷியும் புதிதாக வருவார்கள் என்று தகவல் கசிந்துள்ளது.

குறித்த செய்தி வெளியானதை தொடர்ந்து குக் வித் கோமாளி பார்க்கும் ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.