பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் இவர்களா?

0 79

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மற்ற மொழிகளை போலவே தமிழிலும் மிகவும் பிரபலமானது. விஜய் டீவியில் இதுவரை ஒளிபரப்பான 4 சீசன்களும் மக்கள் மனந்தினை கவர்ந்தது என்றே சொல்லலாம்.

மிக விரைவில் பிக்பாஸ் சீசன் 5 தொடங்கும் என்று அதன் தயாரிப்பு குழுவில் இருந்து தகவல்கள் அடிக்கடி வந்துக் கொண்டிருக்கிறது. கொரோனா 2 ஆம் அலையால் ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பிக்பாஸ் 5 நிகழ்ச்சி அக்டோபர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்பவர்களின் பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு தற்போது அது வைரலாகி வருகிறது.

இதில் விஜய் டீவியில் மிகவும் பிரபலியமான நிகழ்ச்சியான குக் வித் கோமாளி வின்னர் கனி, சுனிதா, பாபா பாஸ்கர், சார்பட்டா பரம்பரை புகழ் ஜான் விஜய், நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், மைனா நந்தினி, செய்தி வாசிப்பாளர் கண்மணி, எம்.எஸ்.பாஸ்கர், லட்சுமி ராமகிருஷ்ணன், டிக்டாக் ஜி.பி.முத்து மற்றும் ஷகீலாவின் மகள் மிகா ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

ஆனால், இந்த பட்டியல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்பவர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இருந்தே பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளமை இதல் இருந்து நன்றாகவே தெரிகின்றது.