ஸ்லீவ்லெஸ்ஸில் கலக்கும் பாரதி கண்ணம்மா!

0 37

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா தொடராகும்.

சந்தேகத்தினால் வீட்டை விட்டு விரட்டப்பட்டு கண்ணம்மா நடந்த போது உடன் நடந்தவர்களைப் போல களைத்துப் போனார்கள் ரசிகர்கள் என்றே கூறலாம்.

குடும்பப் பெண்ணாக சோக சித்திரமாக வந்தாலும் தொடரில் எல்லா சவால்களையும் அதிரடியாக எதிர்கொண்டு சமாளித்துக் கொண்டிருக்கிற பெண்ணாக கண்ணம்மா சித்தரிக்கப்பட்டுள்ளார்.

சீரியஸான கண்ணம்மாவை நம்ம வீட்டுப் பெண்ணாகவே தொடர் ரசிகர்கள் பார்த்துக்கொண்டிருக்க, அவ்வப்போது இன்றைய அசல் நாகரிகப் பெண்ணாக சில படங்களை அல்லது வீடியோக்களை அவரின் இன்ஸ்டெகிராமில் பதிவேற்றுகிறார் கண்ணம்மா, ஸாரி, கண்ணம்மாவாக நடித்துக்கொண்டிருக்கும் ரோஷிணி ஹரிப்ரியன்.

இப்போதும் அப்படியொரு வீடியோவை, கையில்லா ஜாக்கெட் அணிந்து, தூரிகா பாடலுக்கு நடனமாடி இன்ஸ்டெகிராமில் வெளியிட்டிருக்கிறார் ரோஷிணி ஹரிப்ரியன்.

நம்ம கண்ணம்மாவா என்று பார்த்து அதிசயித்துக்கொண்டிருக்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.