டீசர் சாதனைக்கு ஒரு டீசர் ; கேஜிஎப் 2

0 64

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடித்திருக்கும் ‘கேஜிஎப் 2’ படத்தின் டீசர் இவ்வருடம் ஜனவரி மாதம் வெளியானது. இந்திய சினிமாவில் இதுவரை வெளிவந்த டீசர்களிலேயே சில பல முதன்மை சாதனைகளை அந்த டீசர் படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது யூடியுப் தளத்தில் 200 மில்லியன் பார்வைகளை அது கடந்துள்ளது. குறித்த 200 மில்லியன் பார்வையாளர்கள் சாதனையைக் கொண்டாடும் விதத்தில் டீசருக்கே ஒரு டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்கள். ‘ராக்கி பாய் மற்றும் அவரது ஆர்மியின் 200 மில்லியன்’ என்ற தலைப்பில் குறித்த டீசரை வெளியிட்டுள்ளார்கள். அதற்குக் கூட இரண்டே நாட்களில் 57 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சாதனையானது ‘கேஜிஎப் 2’ படம் மீது ரசிகர்கள் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை இது காட்டுகின்றமை சினிமா ரசிகர்களுக்கு நன்கு தெரிகின்றது. இந்திய சினிமாவில் அடுத்து பெரிய வசூல் சாதனையைப் படைக்க உள்ள படங்களுள் இந்தப் படமும் அடங்கும் என்பது சினிமா ரசிகர்களின் கருத்தாக அமைந்துள்ளது. விரைவில் இந்தப் படத்தின் வெளியீட்டுத் திகதியும் படக்குழுவினரினால் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.