பழனி அம்மாவின் ஆசை..

Published:

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், செழியன் ரூமில் போனை பார்த்துக் கொண்டு இருக்க, போன் பாவிப்பதை குறைக்குமாறு சொல்கிறார் ஜெனி. மேலும் செழியனின் போனை வாங்கி அவர் யார் யாருக்கு சட் பண்ணினார் என விசாரிக்கிறார்.

மறுபக்கம் காலையில் ஈஸ்வரி கால் வலிக்குது என ராமமூர்த்தியிடம் சொல்லிக் கொண்டு இருக்க, அங்கு வந்த எழில் அவரின் காலை பிடிக்க செல்ல, அவர் வேணாம் என எழுந்து விடுகிறார். கால் வலிக்குது என சொன்னிங்க நான் பிடிச்சு விடுறேன் எனவும் வேண்டாம் என செல்ல, அமிர்தா எல்லாம் என்னால தானே என எழிலிடம் மன்னிப்பு கேட்கிறார்.

இதையடுத்து பழனிச்சாமியின் பிறந்த நாளை எல்லாருக்கும் சொல்லி செய்ய வேண்டும் என பழனியிடம் சொல்லிக் கொண்டு இருக்க, அவரும் உன் விருப்பப்படியே  செய்றேன்  என சொல்லுகிறார்.

இதை தொடர்ந்து வீட்டில் நானும் சமைக்க கற்றுக் கொள்கிறேன் என ஜெனி சொல்லிக் கொண்டு இருக்க, அங்கு செழியன் வேலைக்கு செல்ல கிளம்புகிறார். அவரிடம் எத்தின மணிக்கு வருவீங்க? ஆபிஸ்க்கு தானே போறீங்க? என கேள்வி மேல் கேள்வியாக கேட்க, ஏன் அவன் கிட்ட இப்படி லோயர் போல நடந்து கொள்ளுறா என கோவப்படுகிறார்.

அதன்பின், பழனி வீட்டுக்கு போன பாக்கியா அவரது அம்மாவுக்கு சாப்பாடு செய்து கொண்டு போய் கொடுக்க, அவரிடம் பழனிக்கு பிறந்த நாள் வருது. நீ தான் முன்னுக்கு நின்று செய்யணும், சாப்பாடு ஓடர் எடுத்துக் கொள்ளு என சொல்கிறார்.

அதன்பின் அங்கு வந்த பழனி, பாக்கியாவுடன் பேசிக் கொண்டு இருக்க, டீ போட்டு எடுத்து வருவதாக சென்று, அவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருப்பதை பார்த்து சந்தோசப்படுகிறார். பழனிக்கு ஆசை இருக்கு ஆனா கேட்டா இல்லை என்று தான் சொல்வான் என சொல்லிக் கொள்கிறார்.

Related articles

Recent articles

spot_img