பாக்கியலட்சுமி சீரியலில் புதிய காதல் அத்தியாயம் ஆரம்பம்

Published:

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு பாக்கியாவின் குடும்பம் மற்றும் பழனிச்சாமியின் உறவினர்கள் வந்துள்ள நிலையில், மாமா எப்பதான் நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்க? என பழனிச் சாமியிடம் ஒருவர் வினாவ, நீயும் கேட்க ஆரம்பிச்சிட்டியா என பழனி சொல்கிறார்.

அந்த நேரத்தில் உங்களுக்கு எப்படிப்பட்ட பொண்ணு வேணும் என எழில் கேட்க, எனக்கு என்ன விருப்பம் என்று நான் சொல்லாமலே அவங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் என பழனி சொல்ல, அங்கு வந்த பாக்கியா வித்தியாசமான டேஸ்ட்ல உங்களுக்கு பிடிச்ச ஸ்வீட் பண்ணி இருக்கேன் என சொல்லி ஸ்வீட் கொடுக்கிறார். அதை வாங்கி சாப்பிடும்போது அவர் சொன்னதை நினைவுப்படுத்தி பார்க்கிறார் பழனி.

மேலும் சொல்லுமாறு ராமமூர்த்தி கேட்க, எங்க அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என சொல்ல, பாக்கியா அவரது அம்மாவை அழைத்துக் கொண்டு ஒரு இடத்தில் உட்கார வைக்கிறதை கவனிக்கிறார். என் அக்கா தங்கச்சிகளை அவங்களோட சகோதரி மாதிரி பார்த்துக்கொள்ளணும் என  சொல்ல பழனிச்சாமியின் சகோதரி சாரியில் ஏதோ கரைப்பட்டு விட்டதால் அதை தட்டி துடைக்கிறார் பாக்கியா அதையும் கவனிக்கிறார் பழனி.

இறுதியாக அவங்கள பார்க்கும் போதே மண்டைக்குள்ள லைட் எரியனும் என சொல்ல, பாக்கியா நிற்கிற  இடத்தில் உள்ள லைட்டுகள் எல்லாம் பளீச் என்று எரிய, பழனிச்சாமியின் ஹார்ட்டில் காதல் அம்பு விட்டது போல காட்டுகிறார்கள்.

இதை தொடர்ந்து பழனிச்சாமிக்கு பாக்கியா மீது காதல் ஏற்பட்டு அவரை கவனிக்க ஆரம்பிக்கிறார் பழனிச்சாமி. இவ்வாறு பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா மீது பழனிச்சாமி காதல் கொள்கிறார். புதிதாக தொடங்கிய இந்த அத்தியாயம் எங்கு போய் முடியும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

Related articles

Recent articles

spot_img