சாய் தன்ஷிகாவின் ‘தி புரூப்’ படத்தின் ‘டிரெய்லர்’

Published:

2006 – ம் ஆண்டு வெளியான ‘திருடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாய் தன்ஷிகா. ஜெயம் ரவி நடிப்பில் 2009 ஆண்டு வெளிவந்த பேராண்மை படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் கவனம் ஈர்த்தார்.

மாஞ்சா வேலு, நில் கவனி செல்லாதே, அரவான், பரதேசி போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.பா.ரஞ்சித் இயக்கத்தில் 2016 -ம் ஆண்டு வெளிவந்த ‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடித்தார். அதன் பின் துல்கர் சல்மானுடன் ‘சோலோ’ என்ற படத்தில் நடித்தார்

இந்நிலையில் தற்போது தன்ஷிகா ‘தி புரூப்’ படத்தில் நடித்துள்ளார். கோல்டன் ஸ்டுடியோ சார்பில் கோமதி சத்யா இப்படத்தை தயாரித்துள்ளார்.இப்படத்தை ராஷிகா மாஸ்டர் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் டிரெயிலர் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.அதன்படி இன்று மதியம் டிரெயிலர் வெளியானது . இதனை பிரபல நடிகர் சசிகுமார் இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளார். தற்போது இந்த டிரெய்லர் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

 

 

Related articles

Recent articles

spot_img