பல லட்சத்தில் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்து அசத்திய ஏகே

Published:

எல்லோரிடமும் கலகலப்பாக பழகக் கூடியவர் தான். ஆனால் அவருடைய நெருங்கிய நட்பு வட்டம் என்று பார்க்கையில் அதில் குறிப்பிட்ட சிலர் மட்டும் தான் இருப்பார்கள்.

அதில் தற்போது நம்ம பிக்பாஸ் ஆரவ் இடம் பிடித்துள்ளார். விடாமுயற்சி படத்தில் இவர்கள் சேர்ந்து நடித்து வருகின்றனர். அதில் ஆரம்பித்த நட்பு தற்போது நெருக்கம் ஆகி இருக்கிறது.

அதிலும் அஜித் பல லட்சம் மதிப்புள்ள பரிசு பொருளை வாரி வழங்கும் அளவுக்கு ஆரவ் அவர் மனதில் இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் கூட இவர்கள் இணைந்திருக்கும் போட்டோ வீடியோக்கள் வெளியானது.

அது மட்டும் இன்றி இருவரும் பல விஷயங்கள் குறித்து நீண்ட நேரம் உரையாடுவார்களாம். இதற்கு முக்கிய காரணம் ஆரவ் ஒரு பைக் ரேசர் என்பது தான்.

அண்மையில் ஆரவ் அஜித்துடன் இணைந்து பைக்கில் ஒரு ட்ரிப் போயிருந்தார். இதுதான் அஜித்தின் நட்பு வட்டாரத்தில் இவர் இணைந்த ரகசியம்.

மேலும் இவருக்காக ஏகே 35 லட்சம் மதிப்புள்ள ஒரு பைக்கையும் கிஃப்ட் செய்திருக்கிறார். இப்படி யாரையும் எளிதில் நட்பு வட்டத்தில் சேர்த்துக்காத அஜித்தையே ஆரவ் இம்ப்ரஸ் செய்து விட்டார்.

https://www.instagram.com/p/C4xBiz8ryeE/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

 

 

 

 

 

Related articles

Recent articles

spot_img