சிவகார்த்திகேயன் எடுத்த முட்டாள்தனமான முடிவு..!

Published:

தமிழ் திரை உலகை பொருத்தவரை சொந்த படம் எடுத்து நஷ்டம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றும் கோடி கணக்கில் கஷ்டப்பட்டு பல வருடங்கள் சேர்த்த பணத்தை ஒரே ஒரு சொந்த பணம் எடுத்து நஷ்டம் அடைந்த நடிகர் நடிகைகள் ஏராளம் என்பது தெரிந்தது.

அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயனும் சொந்த படம் எடுத்து பெரும் நஷ்டம் அடைந்த நிலையில் தற்போது தான் அவர் படிப்படியாக தன்னுடைய கடன்களை எல்லாம் அடைத்து வருகிறார். இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் சொந்த படம் எடுக்க முடிவு செய்திருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளதை பார்த்து சிவகார்த்திகேயன் என்ன லூஸா? என திரை உலகினர் கேள்வி கேட்டு வருகின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் ’சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கி சில படங்கள் தயாரித்தார் என்பதும் சில படங்களை விநியோகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ஆர்டி ராஜா என்பவருடன் இணைந்து சில படங்கள் தயாரித்த நிலையில் அந்த படங்கள் தோல்வி அடைந்து பெரும் நஷ்டத்தை கொடுத்தது என்பதும் இதனால் சிவகார்த்திகேயனுக்கு கோடிக்கணக்கில் கடன் இருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தான் தற்போது சினிமாவில் நடித்ததால் கிடைத்த பணத்தை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக கடனை அடைத்த நிலையில் தற்போது மீண்டும் அவர் சொந்த படம் எடுக்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பில் உருவாகும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்கள் நாளை முழுதாக வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தான் சிவகார்த்திகேயன் என்ன லூஸா? நன்றாகத்தானே அவருடைய வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது? அப்படி இருக்கும்போது எதற்காக திடீரென மீண்டும் சொந்த படம் எடுக்கிறார்? என்ற கேள்விகளை அவரது ரசிகர்களே கேட்டு வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img