பணம் வெட்கம் அறியாதுன்னு நிரூபித்த சூரி.

Published:

இப்போது ஹீரோவாக கலக்கி கொண்டிருக்கிறார். விடுதலை 2, கருடன், கொட்டுக்காளி என அடுத்தடுத்த படங்கள் வரிசை கட்டிக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ஒரு புகைப்படம் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறது. அதாவது எதிரி போல் சண்டை போட்ட விஷ்ணு விஷால் உடன் இவர் பழம் விட்டுள்ளார்.

நிலம் வாங்குவது தொடர்பாக சூரிக்கும் இவருக்கும் பிரச்சனை இருந்து வந்தது. விஷ்ணு விஷாலின் அப்பா பண மோசடி செய்ததாக மீடியாக்களில் தெரிவித்த சூரி அதை நீதிமன்றம் வரை கொண்டு சென்றார்.

பதிலுக்கு விஷ்ணு விஷாலும் காட்டமாக பதிலளித்ததோடு எதிர்காலத்தில் இனி அவருடன் நடிக்க மாட்டேன் என்றும் கூறியிருந்தார். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு இந்த பிரச்சனை முடிந்து விட்டதாக அவரே தெரிவித்தார்.

அப்போதே இதை நாலு பேர் நாலு விதமாக பேசி வந்தனர். இந்நிலையில் விஷ்ணு விஷால் தன் அப்பா மற்றும் சூரி உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

காலம் ஒன்றே அனைத்திற்கும் பதில் சொல்லும், நல்லதே நடக்கட்டும் சூரி அண்ணா என தெரிவித்துள்ளார். அதற்கு சூரியும் நன்றி கூறியுள்ளார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் பணம் வெட்கமறியாது என நிரூபித்து விட்டார்கள். ஒரு காலத்தில் இவர்கள் இருவரும் என்ன உருட்டு உருட்டினார்கள்.

ஆனால் இப்போது ஒன்றுமே நடக்காதது மாதிரி சேர்ந்து விட்டார்கள். ஆக மொத்தம் பணத்துக்கு தான் மதிப்பு என கண்டபடி விமர்சித்து வருகின்றனர். ஒரு சிலர் இவர்கள் இணைந்ததற்கு வாழ்த்தும் கூறி வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img