இரண்டு சீரியல்களை முடிக்கும் விஜய் டிவி..

Published:

விஜய் டிவியின் சீரியல்களுக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் சன் டிவி தொடர்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து பின்தங்கி வருகிறது விஜய் டிவி.

விஜய் டிவியில் முக்கிய தொடராக இருந்து வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது என கடந்த வாரமே செய்தி வெளியானது.

இந்நிலையில் விஜய்யின் அப்பா எஸ்ஏசி நடித்து வரும் கிழக்கி வாசல் என்ற தொடரையும் விஜய் டிவி முடிவுக்கு கொண்டு வர இருக்கிறதாம்.

விரைவில் இதன் கிளைமாக்ஸ் வர இருக்கிறது என வந்திருக்கும் தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

இந்த சீரியல் தொடங்கி இன்னும் 200 எபிசோடுகள் கூட ஒளிபரப்பாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img