சன் டிவியில் முடிவுக்கு சில சீரியல்கள்…..

Published:

சன் டிவியில் ’அன்பே வா’ உள்ளிட்ட ஒரு சில சீரியல்கள் முடிவுக்கு வர இருக்கும் நிலையில் புதிதாக இரண்டு சீரியல்கள் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அதில் ஒரு சீரியலின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் ’அன்பே வா’ என்ற சீரியல் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சன் டிவியில் சரிகம நிறுவனம் தயாரிக்கும் இரண்டு சீரியல்கள் புதிதாக ஆரம்பமாக இருப்பதாகவும் அதில் ஒன்று ’மாலினி’ என்றும் இன்னொன்று  டெல்னா டேவிஸ்  நடிக்கும் சீரியல் என்றும் கூறப்படுகிறது.

இதில்  டெல்னா டேவிஸ் நடிக்கும் புதிய சீரியலின் பூஜை ஒரு மாதத்திற்கு முன்பே போடப்பட்ட நிலையில் நேற்று முதல் இந்த சீரியலின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக தெரிகிறது. இந்த சீரியலில்  டெல்னா டேவிஸ் முக்கிய வேடத்தில் நடிக்கும் நிலையில் அவரது புதிய லுக் மற்றும் சேலை கட்டிய புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ள நிலையில் அவை தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த சீரியல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த சீரியல் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Related articles

Recent articles

spot_img