ஒரே நேரத்தில் இரண்டு பிரபலங்கள்…..

Published:

நடிகை சமந்தா கடந்த சில மாதங்களாக எந்த புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகாத நிலையில் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு பிரபலங்களின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாகவும் இந்த இரண்டு படங்களிலும் சேர்த்து அவருக்கு ரூபாய் 20 கோடி சம்பளம் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிகை சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன் மயோசிட்டி என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அதற்கு சிகிச்சை பெறுவதற்காக சில மாதங்கள் நடிப்பில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் முழுமையாக குணமடைந்து படப்பிடிப்பிற்கு வந்துள்ளார் என்பதும் குறிப்பாக ஒரு பாலிவுட் வெப் தொடரில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் தற்போது அவர் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் இரண்டுமே பிரபல  நடிகர்கள் படங்கள் என்பதும் தெரியவந்துள்ளது. ஒன்று தளபதி விஜய் நடிக்க இருக்கும் கடைசி திரைப்படமான ’தளபதி 69’ படம் என்றும் எச் வினோத் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்மதம் பெற்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் அல்லு அர்ஜுன் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்திலும் சமந்தா தான் நாயகி என்றும் இந்த இரண்டு படத்திற்கும் தலா 10 கோடி ரூபாய் அவர் சம்பளம் வாங்க இருப்பதாகவும் எனவே அவருக்கு 20 கோடி ரூபாய் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

நடிகை சமந்தா கடந்த சில ஆண்டுகளாக 5 முதல் 6 கோடி மட்டுமே சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நிலையில் தற்போது ஒரு படத்திற்கு 10 கோடி வாங்க இருப்பதாக கூறப்படுவது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தாலும் இந்த சம்பளம் குறித்த தகவல் சமந்தாவின் தரப்பில் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img