அமீர் படத்தின் டிரெயிலர்

Published:

இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’. இப்படத்தை மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன்,சரவணசக்தி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வித்தியாசாகர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

படத்தின் பாடலான ஆஞ்சி ஆஞ்சி மற்றும் ஓட்டு கேட்டு பாடல்கள் சென்ற வாரம் வெளியானது. இதைத்தொடர்ந்து உயிர் தமிழுக்கு படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. அரசியல் பின்னணி கதைக்களத்தோடு இப்படம் உருவாகியுள்ளது. படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related articles

Recent articles

spot_img