நாளை ஒரு ஆச்சரிய அறிவிப்பு….

Published:

விக்ரம் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்புகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் தற்போது இரண்டு பிரபலங்கள் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சியான் விக்ரம் நடிப்பில் ’சித்தா’ அருண்குமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’சியான் 62’ படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்தது. இந்த படத்தில் எஸ் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும், ஜி வி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தில் நாயகியாக துஷாரா விஜயன் நடிக்க இருப்பதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில் ஷிபு தமீன் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் தற்போது எடிட்டராக பிரசன்னா பணிபுரிய இருப்பதாகவும் சி எஸ் பாலச்சந்தர் என்பவர் கலை இயக்குனராக பணிபுரிய இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகும் என்று குறிப்பாக டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே நாளை நிச்சயம் சியான் விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விக்ரம் நடித்த ’தங்கலான்’ மற்றும் ’துருவ நட்சத்திரம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/C50qFjlhqvg/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

https://x.com/hr_pictures/status/1780121509853331574

Related articles

Recent articles

spot_img