சினிமாவில் வருவார் என்று எதிர்பார்த்தால் அரசியலுக்கு வந்துட்டாரே..

Published:

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அசீம், சினிமாவில் தொடர்ந்து நடிப்பார் என்று எதிர்பார்த்தால் திடீரென அவர் அரசியலுக்கு குதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் அசீம் என்பதும் அந்த நிகழ்ச்சியில் அவர் டைட்டில் வின்னராக வருவார் என்று யாருமே எதிர்பார்க்காத வகையில் அவருக்கு டைட்டில் பட்டம் கொடுக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்தது.

சீரியல் நடிகரான அசீம் ’மாயா’ என்ற சீரியலில் அறிமுகமாகி அதன் பின்னர் ’பிரிவோம் சந்திப்போம்’ ’தெய்வம் தந்த வீடு’ ’பிரியமானவளே’ ’பகல் நிலவு’ ’கடைக்குட்டி சிங்கம்’ ’பூவே உனக்காக’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். அதன்பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் கமல்ஹாசனால் கண்டிக்கப்பட்ட அவருக்கு டைட்டில் பட்டம் அவர் கையாலே கிடைத்தது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் சினிமாவில் நடிக்க இருப்பதாகவும் ஒரு சில படங்களில் கூட அவர் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் திடீரென அவர் அரசியலில் குதித்துள்ளார். சீமானின் நாம் தமிழர் கட்சியில் இணைந்துள்ள அசீம் தனது நண்பர் போட்டியிடும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பிரச்சாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து அசீம் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘என்னுடைய அப்பா, தாத்தா எல்லாம் திமுக ஆதரவாளர்கள் தான், நானும் திமுக ஆதரவாளராக தான் இருந்தேன், ஆனால் சமீபத்தில் சீமானின் அரசியல் எனக்கு பிடித்தது, அதனால் அவருடைய கட்சியில் இணைந்தேன் என்று கூறியுள்ளார்.

அடுத்தது அரசியல்வாதியா? சினிமா வாழ்க்கையா? என்று கேட்ட கேள்விக்கு ’எதையும் நான் திட்டமிடுவதில்லை, முதலில் தொகுப்பாளராக தான் டிவிக்கு வந்தேன், அதன் பிறகு சீரியல் நடிகரானேன், பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்ததும் அதில் கலந்து கொண்டேன், டைட்டில் பட்டமும் கிடைத்தது, காலம் என்ன தருகிறதோ அதை ஏற்றுக் கொள்வேன். என்னுடைய அடுத்த நகர்வு சினிமாவா? அல்லது அரசியலா? என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும். அதேபோல் 2026 வரும் போது என் தலையில் என்ன எழுதி இருக்கிறதோ அதை ஏற்றுக் கொள்வேன் என்று அவர் கூறியுள்ளார்.

Related articles

Recent articles

spot_img