சியான் விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக்கில் சஸ்பென்ஸ்..!

Published:

சியான் விக்ரம் நடிக்க இருக்கும் 62 வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் அந்த போஸ்டரில் இந்த படம் இரண்டாவது பாகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி என்றால் இந்த படத்தின் முதல் பாகம் எங்கே என்ற சஸ்பென்ஸ் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சமீபத்தில் வெளியான சித்தார்த் நடித்த ’சித்தா’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அருண்குமார் அடுத்ததாக விக்ரம் நடிக்க இருக்கும் படத்தை இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்க இருப்பதாகவும் மேலும் வில்லன் கேரக்டரில் எஸ்ஜே சூர்யா நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி ஜிவி பிரகாஷ் என்ற படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் இந்த படத்தின் பணிகள் தொடங்கி விரைவில் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்திற்கு ’வீர தீர சூரன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு அந்த டைட்டில் அருகில் ’பார்ட் 2’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி என்றால் இந்த படம் ’வீர தீர சூரன்’ படத்தின் இரண்டாம் பாகம் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து முதல் பாகம் எங்கே என்ற கேள்விக்கு படக்குழுவினர் விரைவில் பதில் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் இருப்பதை பார்க்கும் போது மீண்டும் அவரிடம் ஒரு தரமான படத்தை எதிர்பார்க்கலாம் என்பது தெரிய வருகிறது

Related articles

Recent articles

spot_img