மன்சூர் அலிகான் ICU வில் கவலைக்கிடம்!

Published:

கடந்த கால சினிமாக்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தற்போது வரை பிரபலமாக இருக்கும் நடிகர் மன்சூர் அலிகான் ஆவார். இவர் சமீபத்தில் பிரசாரத்தின் இடையில் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளார்.

நடிப்பில் மட்டும் இன்றி நிஜ வாழ்க்கையிலும் ஜதார்த்தமாக செயற்படும் மன்சூர் அலிகான் தற்போது நடைபெற உள்ள மக்களவை தேர்தல் வேட்பாளர் ஆவார். பலாப்பழ சின்னத்தில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்காண காரணத்தை அவரே கூறி உள்ளார்.

அவர் கூறுகையில் ” தேர்தல் தொடர்பான பணிக்காக குடியாத்தம் சந்தையில் இருந்து வீடு திரும்பிய போது வழியில் சிலர் பழசாறு மற்றும் மோர் வழங்கினர்.கட்டாயப்படுத்தி அவர்கள் கொடுத்த பழச்சாறை குடித்த சிலமணி நேரங்களிலேயே மயக்கம் மற்றும் நெஞ்சுவலி ஏற்றப்பட்டது” என நடிகர் மன்சூர் அலிகான் கூறி உள்ளார்.

Related articles

Recent articles

spot_img