திடீரென காணாமல் போன யுவன்ஷங்கர் ராஜா

Published:

பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடீரென டெலிட் செய்யப்பட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா என்பதும் இவர் ஏராளமான திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் நிலையில் தற்போது விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பதும் சமீபத்தில் அந்த படத்தின் சிங்கிள் பாடலான ‘விசில் போடு’ என்ற பாடல் வெளியாகி இணையத்தில் வைரலானது என்பதையும் பார்த்தோம்.

இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் ஒரு சிலர் இந்த பாடலுக்கு நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வந்தனர். 30 மில்லியனுக்கும் மேலாக இந்த பாடல் பார்வையாளர்கள் பெற்ற போதிலும் அனிருத் அளவிற்கு இந்த பாடல் இல்லை என்று கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் கணக்கு திடீரென டெலிட் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்றாலும் பலரும் பல்வேறு காரணங்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Related articles

Recent articles

spot_img