ஹனு-மேன் பட நாயகனின் புதுப்பட அப்டேட்

Published:

2011 ஆம் ஆண்டு சாம்பி ரெட்டி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார் தேஜா சஜ்ஜா . தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் . பிரசாந்த வர்மா இயக்கத்தில் இந்தாண்டு ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் அனுமன். அமிர்த்தா ஐயர், வரலட்சுமி சரத்குமார், சமுத்திரகனி, வினய் ராய் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இத்திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதுவரை இப்படம் 330 கோடி ரூபாய் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து தேஜா சஜ்ஜாவின் அடுத்த படமான மிராய் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான கார்த்திக் கட்டாமானேனி இயக்கவுள்ளார். பீபில் மீடியா ஃபேக்டரி மிராய் படத்தை தயாரிக்கவுள்ளனர்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்ரையும் பட முன்னோட்டத்தையும் படக்குழுவினர் வெளியிட்டனர். இப்படம் பேரரசரான அசோகன் மற்றும் அவரது 9 ரகசியங்களை பற்றிய கதையாகும். 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் 2டி மற்றும் 3டியில் வெளியாகவுள்ளது.

 

 

 

 

 

Related articles

Recent articles

spot_img